கோடை விடுமுறை, வார விடுமுறை எதிரொலி : திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
பதிவு : மே 12, 2019, 12:22 AM
கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கும் மேல் காத்துக்கிடந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வைகுண்டம் கியூ காம்ளக்சில் பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையாக காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் காரணமாக, தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், பக்தர்கள் பலர் , பூங்காக்களில் தங்கியுள்ளனர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு குடிநீர், மோர், பால், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன.  தங்கும் விடுதிகளில் உள்ள பக்தர்களை 24 மணி நேரத்திற்குள் அறையை காலி செய்யுமாறு காவல்துறையினர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கூட்டம் காரணமாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணிநேரத்திற்கும் மேலாக காத்து கிடந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

பிற செய்திகள்

கொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

80 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவிப்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.

133 views

புதுச்சேரி எல்லையில் தீவிர வாகன சோதனை - நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

66 views

இ.பி.எப் பங்களிப்பு 10 சதவீதமாக குறைப்பு - ஜூன் மாத ஊதியம் அதிகரிக்குமா?

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பிடிக்கும் தொகையை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

204 views

பொது போக்குவரத்து சேவையில் 4 ஆயிரம் பேருந்துகள் - அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர அனுமதி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு, 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன.

9 views

"ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலம் மீட்போம்" - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலமாக மீட்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.