போலி ஆவணங்கள் தயாரித்த கும்பல் சிக்கியது : 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்
பதிவு : மே 12, 2019, 12:14 AM
போலி ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேர் கொண்ட கும்பலை க்யூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் 50க்கும் மேற்பட்டோர் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றதாக கூறி குடியுரிமை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதே போல இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒரு நபர் சென்னை வந்து சென்றதும்,தெரியவந்தது. இதனை தொடர்ந்து க்யூ பிரிவு தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது. அப்போது, இதனையடுத்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த இலங்கையயை சேர்ந்த தனூக ரோசன் என்பரை பூந்தமல்லியில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து  நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் தொடர்புடைய 40 பேர் பிடிபட்டனர். இதில் திருச்சியை சேர்ந்த கலையரசி என்ற பெண் மூளையாக செயல்பட்டதும் அவருக்கு உதவியாக ராதாகிருஷ்ணன் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்த‌து .இவர் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் செயலாளராக இருக்கிறார். மேலும் அச்சு அசலாக போலி பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கு கிருபா,நிமலன்,உதயகுமார் என்ற இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இதில் மொத்தமாக சென்னை,திருச்சி,கோவை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேரை க்யூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள், பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கலையரசி,ராதாகிருஷ்ணன், கிருபா உள்ளிட்ட 13 பேரை நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள்,குடியுரிமை அதிகாரிகள் என பலர் உள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் க்யூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

772 views

பிற செய்திகள்

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

49 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

27 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

16 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

70 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.