8 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
பதிவு : மே 11, 2019, 02:51 PM
ஆரணி அருகே 8 ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, உத்தரவின்பேரில், மருத்துவ கண்காணிப்பாளர் பாண்டியன் தலைமையிலான குழு, கண்ணமங்கலம் என்ற பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனையில் அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில், மேற்குவங்கத்தை சேர்ந்த ராஜ்குமார் பிஸ்வாஸ் என்ற போலி மருத்துவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் பிஸ்வாஸ் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ராஜ்குமார் பிஸ்வாசை கைது செய்த கண்ணமங்கலம் காவல்துறையினர், அங்கிருந்த மருத்துவ பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலி மருத்துவர் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மருத்துவரை கண்டுபிடித்த  அதிகாரிகளையும், ஆட்சியரையும் மக்கள் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

50 views

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

86 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

779 views

பிற செய்திகள்

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

11 views

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

94 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

1097 views

காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

47 views

சூலூர் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு : மனநிறைவாக உள்ளது - ம.நீ.ம. வேட்பாளர் கருத்து

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

39 views

ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.