சேலம்-ஈரோடு இடையே தொடரும் ரயில் கொள்ளை : உயர் அதிகாரிகளுடன் ரயில்வே டிஜிபி ஆலோசனை
பதிவு : மே 11, 2019, 02:44 PM
சேலம் - ஈரோடு இடையே தொடரும் ரயில் கொள்ளைகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.பி. ரோகித் மற்றும் டி.எஸ்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். சங்ககிரி ரயில் கொள்ளை வழக்கு விசாரணையின் போக்கு, ரயில் நிலையங்கள், இருப்பு பாதைகளில் பாதுகாப்பை எந்த வகையில் அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு சைலேந்திரபாபு அறிவுறுத்தினார். மேலும், பயணத்தின் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவசர உதவிக்கு ஆயிரத்து 512 என்ற எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நகையை பறி கொடுத்த 10 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் பழைய குற்றவாளிகளுக்கு ஏதோனும் தொடர்புள்ளதா, புதிய குற்றவாளிகளா அல்லது வட மாநில கொள்ளையர்களா என்ற கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

பிற செய்திகள்

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

8 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

211 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

150 views

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

21 views

மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

403 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.