தொழிலதிபர்களை கடத்தி பணம் பறித்து வந்த கும்பல் - ஒரு ஆண்டுக்கு பின் கடத்தல் கும்பலை பிடித்த போலீசார்
பதிவு : மே 11, 2019, 12:46 PM
பண்ருட்டி பகுதியில் தொழிலதிபர்களை கடத்தி பணம் பறித்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர், தொழிலதிபர்  விஜயரங்கன். 2  நாட்களுக்கு முன் இவரது செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, கடந்த ஆண்டை போல, மீண்டும்  கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள், 80 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய ரங்கன் உடனடியாக போலீஸில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஜய ரங்கனிடம் பணம் பெற்று சென்ற மாயவன் என்ற முந்திரி வியாபாரியை, மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது. மாயவனிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாயை பறித்துகொண்டு அவரை, நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். உடனடியாக தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்ட போலீசார், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அருகே சொகுசு காரில் இருந்த 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். மாயவனை கடத்தி பணம் பறித்ததையும், கடந்த ஆண்டு விஜய ரங்கனை கடத்தியதையும் அந்த கும்பல் ஒப்புக் கொண்டது. இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பிற செய்திகள்

விளைநிலங்களில் தோண்டிய போது கிடைத்த அபூர்வ சிலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி ஆவுடையாபுரம் பகுதியில் கருப்பையா என்பவரின் விளைநிலத்தில் உழவு பணிக்காக தோண்டும்போது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சுவாமி கற்சிலை ஒன்று கைகள் மட்டும் சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

55 views

பேரூராட்சியின் செயல் அலுவலர் மீது முறைகேடு புகார் - சஸ்பெண்ட் செய்து பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியின் செயல் அலுவலர் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

251 views

4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

39 views

ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்

உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

89 views

தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.

18 views

சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.