குடிபோதையில் 14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை
பதிவு : மே 11, 2019, 10:06 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிபோதையில், 14 வயது மகளை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
வையம்பட்டி அருகே உள்ள புதுமணியாரம்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி, கடந்த 30ஆம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, உறங்கிக் கொண்டிருந்த தமது14 வயது மகளை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தாய் மற்றும் சகோதரனிடம் கூறி, அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாய், சிறுமியுடன் சென்று மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், மகளை பலாத்காரம் செய்த கட்டடத் தொழிலாளியை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம்

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 views

மழையும்... வெயிலும்... வானிலை நிலவரம்

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 views

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.

10 views

தனியார் மருத்துவமனை கட்டண விவரம் - அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

12 views

"ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது" - தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

140 views

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.

459 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.