பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவான தொழிலதிபர் அதிரடியாக கைது
பதிவு : மே 11, 2019, 08:45 AM
பாதுகாப்பிற்காக பக்கத்து வீட்டில் விட்டுச் சென்ற பள்ளி மாணவிக்கு, அந்த வீட்டின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் ராமன்துறையைச் சேர்ந்தவர், ரெபின். தொழிலதிபரான இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வெளியில் வேலைக்கு செல்லும் போது, பள்ளியில் படிக்கும் தனது மகளை, பாதுகாப்பிற்காக ரெபின் வீட்டில், விட்டுச் செல்வதை அந்த பெண் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் விட்டுச்செல்லும் போது, பள்ளி மாணவியிடம் ரெபின் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தனது தாயிடம் பள்ளி மாணவி சொல்ல, அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவான ரெபினை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயின் தவறான உறவால், மகள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிற செய்திகள்

"இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி" - மத்திய அரசு மீது கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பணம் பறிப்பு - செல்போனில் அழைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் காளிதாசனை செல்போனில் அழைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 views

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.

4 views

கொரோனாவுக்கு இலவச சித்த மருத்துவ சிகிச்சை - மாநகராட்சி உதவியுடன் தனியார் கல்லூரியில் பிரத்யேக மையம்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாநகராட்சி உதவியுடன் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

34 views

சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் சென்னை வருகை

கொரோனா ஊரடங்கால் சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

47 views

நேரு வீதி மார்க்கெட்டில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள மார்கெட் பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.