பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் மிரட்டல் - 4 இளைஞர்கள் கைது
பதிவு : மே 11, 2019, 04:03 AM
பட்டப்பகலில் வீடு புகுந்து, கத்தி முனையில் செல்போன் திருடிய சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வடமாநிலத்தை சேர்ந்த 7 பேர் ஆவடியில் வசித்து வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி, வடமாநில தொழிலாளர்கள் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்த 5 பேர், செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி, செல்போன் திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன், ஜெய்சதீஷ், செந்தில்குமார், சஞ்சய் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அருண் என்பவரை மட்டும் தேடி வருகின்றனர். செல்போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

முதியவரிடம் செல்போன் பறித்த விவகாரம் : 3 இளைஞர்கள் சிக்கினர்

முதியவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிய சம்பவத்தில், இளைஞர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

211 views

பிற செய்திகள்

வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.

8 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

14 views

தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

119 views

"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்

பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

11 views

ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

95 views

ஊராட்சி அலுவலக தளவாட பொருள்கள் திருட்டு - ஊராட்சி அலுவலர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.