விஷாலின் அயோக்யா படம் ரிலீஸ் இல்லை : நிதி பாக்கி விவகாரத்தால் பட ரிலீஸ் தள்ளிவைப்பு
பதிவு : மே 11, 2019, 01:57 AM
விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படம், நிதி பாக்கி விவகாரத்தால் தள்ளிப் போனது.
தயாரிப்பாளர் மது தாக்கூருக்கு பண நெருக்கடி காரணமாக அயோக்யா படம் வெளியாகவில்லை என தெரிகிறது. பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் நிலுவையில் உள்ள 3 கோடி ரூபாய் பாக்கியை கொடுத்தால் தான், இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என தென்னிந்திய திரைப்பட சபை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட விநியோகிஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே, அயோக்யா பட ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விஷால், நிதி பிரச்சினையால் திட்டமிட்டப்படி அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். தனக்கும் நேரம் வரும். எனது பயணம் தொடரும் என பதிவிட்டுள்ளார். நடிகர் பார்த்திபன், கடைசி நேரத்தில் படத்தை தள்ளி வைப்பது, நியாயமற்ற செயல் என டுவிட்டரில் விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

907 views

பிற செய்திகள்

தனுஷின் ஹாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான "தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பக்கிர்" தமிழில் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.

213 views

9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

986 views

ஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்

220 views

ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

ராஜூ முருகன் எழுதி, இயக்கியுள்ள ஜிப்ஸீ என்ற திரைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

43 views

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் தீபாவளி வெளியீடு

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்- சமூக சேவகர் என இரு வேடங்களில் நடிக்கிறார்

75 views

விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா கருத்து

விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றிப் பெறகூடியவர்கள் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.