ஆசிரியர் பகவான் மீது இளம்பெண் பொய் புகார்?
பதிவு : மே 11, 2019, 01:56 AM
ஆசிரியர் பகவான் மீது, இளம்பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளிகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான்.... இவர் கடந்த ஆண்டு பணியிடம் மாற்றப்பட்ட நிலையில், அவரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் கட்டி பிடித்து அழுத‌து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர்களின் அன்பை பெற்ற ஆசிரியர் பகவானை பணியிடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாடுமுழுவதும் அவரது பெயர் பிரபலமடைந்த‌த‌து. சமீபத்தில்,  ஜூன் 18 ஆம் தேதி சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன்   பகவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில், ஆசிரியர் பகவான்  , திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருங்கி பழகிவிட்டு,  ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர்  புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் பகவானையும், புகார் அளித்த பெண்ணையும் போலீசார் அழைத்து 5 மணி நேரம் விசாரித்துள்ளனர். அப்போது ஆசிரியர் பகவான், புகார் கொடுத்த பெண்ணை டி.என்.ஏ, பரிசோதனைக்கு அழைத்த‌தாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், கால அவகாசம் கோரியதால், காவலர்கள் அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்து அனுப்பியுள்ளனர். இதனால், அந்த பெண் பொய் புகார் கொடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2176 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

6144 views

பிற செய்திகள்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

120 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

11 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

39 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

48 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.