காங்கிரசில் சேர த.மா.கா.வினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு
பதிவு : மே 11, 2019, 12:19 AM
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைக்க முயற்சி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். நீண்ட நெடுங்காலமாக காமராஜர், மூப்பனார் ஆகியோர் தலைமையில் செயல்பட்டவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் இணைவது என்ற முடிவு அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் எனக் குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, தாய் வீடானா காங்கிரஸில் இணைய வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரை அரவணைக்க, தயாராக இருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

867 views

பிற செய்திகள்

கர்நாடகாவுக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது

தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மூட்டைகள் ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

13 views

சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத், ஜஸ்வந்த் உள்ளிட்ட 4 பேர் தங்கி தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலை செய்து வந்தனர்.

20 views

2-வது மனைவி கொலை : கணவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது மனைவியை அடித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

போலீசார் சீருடையில் கோவை தங்க வியாபாரியிடம் கொள்ளை ...

கோவையில் இருந்து ஆந்திரா சென்ற முகுந்தன் என்ற தங்க வியாபாரியிடம் போலீசார் சீருடையில் வந்த இரண்டு நபர்கள், அவர் வைத்திருந்த 80 கிராம் நகையை பறித்துகொண்டு சென்றுள்ளனர்.

23 views

காரில் என்.எல்.சி. ஊழியர் உடல் கண்டுபிடிப்பு : கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த நயினார் குப்பம் காட்டு பகுதியில் கார் ஒன்றின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 views

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.