"43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்படும்" - சத்ய பிரதா சாகு
பதிவு : மே 10, 2019, 07:38 AM
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு வாக்குகளை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு வாக்குகளை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மறுவாக்குப்பதிவு கோரிய எஞ்சிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
 ஆலோசனை 

தமிழகத்தில், வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கபட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா  சாஹு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

43 views

"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராதது" - ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை தாமே எதிர்பார்க்கவில்லை என தீபா தெரிவித்துள்ளார்.

37 views

"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்?" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

காவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

160 views

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 40 காவலர்கள்

சேலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

715 views

நிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்

கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.

42 views

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.