செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடி விற்பனை : ரவுடிகளிடம் விற்பனை செய்து வந்த பலே திருடன் : போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
பதிவு : மே 10, 2019, 04:30 AM
சென்னையில் செல்போன் உள்ளிட்டவற்றை திருடி ரவுடிகளிடம் விற்பனை செய்து வந்த பலே திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எண்ணூரை சேர்ந்த அர்ஜுன் என்ற ஹரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தபோது, பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய அந்த நபர், பட்டினப்பாக்கத்தில் கூடைப்பந்து வீராங்கனை ஒருவரின் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இது அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் மூலம் உறுதியானது. போலீசாரிடம் சிக்காமல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரி, தான் திருடிய பொருட்களை ரவுடிகளிடம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.  புதுச்சேரியில்  22 செல்போன்களை திருடி வந்து சென்னை எண்ணூரில் உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிக்கும் சிலரிடம் ஹரி விற்றதும், அவர்கள் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் வந்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணைக்காக எண்ணூர் வந்ததால், அச்சமடைந்த ஹரி, தான் விற்ற செல்போன்களை மீண்டும் வாங்கி போலீசார் சென்ற பின் அவற்றை பர்மா பஜாரில் விற்றதும் தெரிய வந்துள்ளது. தான் திருடிய பொருட்களை எல்லாம் குற்ற செயல் புரியும் நபர்கள் மற்றும் ரவுடிகளிடம் மட்டுமே விற்பனை செய்வது ஹரியின் வழக்கம் என்பதை அறிந்த போலீசார் விசாரணைக்குப் பிறகு ஹரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பலே திருடன் ஹரியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

952 views

பிற செய்திகள்

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

9 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

239 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

171 views

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

23 views

மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

424 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.