பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்
பதிவு : ஏப்ரல் 25, 2019, 05:01 PM
மாற்றம் : ஏப்ரல் 25, 2019, 05:04 PM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் நேற்று முன்தினம் ஹரியும், சிவனும் சந்திக்கும் நிகழ்ச்சி களைகட்டியது. ஏழாம் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஹரிகிருஷ்ண பெருமாள் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது.  இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


ஆதிகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற ஆதிகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை விழாவின் 7ஆம் நாளான இன்று, முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.  தேர்த்திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிகேசவப் பெருமாள், முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தேரை ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

பவானி அருகே தீமிதி திருவிழாஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் கிராமத்தில் உள்ள சசால மாரியம்மன் கோயில் திருவிழாவில், 500-க்கும் மேற்பட்டோர் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கிய குண்டம் மற்றும் கம்பம் திருவிழாவை முன்னிட்டு, கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றி, இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தினமும் இரவில் கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.இதைத் தொடர்ந்து இன்று பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடைபெற்றது.கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்திற்கு கோயில் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து மலர்செண்டு உருட்டி தீ மிதித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் 500 க்கும் மேற்பட்டோர், வேம்பு தழையுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுவட்டார கிராங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரெங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழாஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் சித்திரை தேர்த் திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.முன்னதாக மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்துசேர, கொடியேற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது.வழக்கமாக, தை மற்றும் பங்குனி தேரோட்டங்களில் நம்பெருமாள் எழுந்தருள்வார். ஆனால் சித்திரை தேரோட்டத்தில் மட்டுமே உபயநாச்சியர்களுடன் நம்பெருமாள் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1452 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7717 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1688 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4871 views

பிற செய்திகள்

"பக்தர்களுக்கு பிஸ்கெட் போன்ற உணவு வழங்க உத்தரவு" - தமிழக தலைமை செயலாளர் சண்முகம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், இது குறித்து விவரித்தார்.

8 views

திருச்சி அருங்காட்சியக சிலை திருட்டு வழக்கு : விசாரணையில் வெளியான தகவல்கள்...

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

19 views

சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

14 views

அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.

17 views

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

35 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.