இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:50 AM
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு  பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தேர்தல் ஆணையதின் உத்தரவுக்கு தடை கோரியும் சசிகலா, தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது சசிகலா, தினகரன் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் சசிகலா தரப்பில் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக தினகரன் பதிவு செய்ததால் இவ்வழக்கில் அவர் மனுதாரராக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1609 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5178 views

பிற செய்திகள்

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

2063 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

8 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

74 views

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

111 views

தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

19 views

தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.