குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:47 AM
மதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்ட நபர்களை கைது செய்ய கோரி மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அந்த சமூதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர்  மதுரை - சென்னை நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு காவலர் காயமடைந்தார். பரபரப்பான சூழலை அடுத்து அங்கு வந்த மதுரை சரக டி.ஐ.ஜி பிரதிப்குமார் மற்றும் மதுரை எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பிற செய்திகள்

சென்னையில் கொரோனாவை தடுக்க அதிரடி- வடசென்னையில் பல்வேறு இடங்களை தனிமைப்படுத்த திட்டம்

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

0 views

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு இல்லை? - தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

6 views

10ம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிப்போகுமா? -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

24 views

ஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது

51 views

சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

20 views

போலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.