கோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:34 AM
கரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கரூர் மாவட்டம் நானபரப்பு மாரியம்மன் கோவில் திருவிழாவின் இறுதி நாளில், மஞ்சள் நீர் கம்பம், காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு மதத்தினர் வசிக்கும் தெரு வழியாக சென்றபோது, அங்குள்ள சிலர் மீது மஞ்சள் நீர் பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகராறு எழுந்தபோது, ராஜிவ், சாதிக் பாட்சா ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கக்கன் காலனி பகுதியை சேர்ந்த சிலர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யுமாறு மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து, 6 பேரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

958 views

பிற செய்திகள்

கோதாவரி - காவிரி இணைப்பிற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 views

தோல்வியடைந்த வேட்பாளர் அளித்த பிரியாணி விருந்து

சுமார் 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கி நன்றி தெரிவித்தார்.

137 views

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சிறுவர் ரயிலில் உற்சாக பயணம்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

10 views

"மனோரமா பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்" - இயக்குநர் பாக்யராஜ்

மறைந்த நடிகை மனோரமாவின் 82வது பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

10 views

குடிநீர் டேங்க் விழுந்து சிறுமி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில் சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.