கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பதிவு : ஏப்ரல் 25, 2019, 01:14 AM
கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்படி கருவை கலைப்பதற்கான கால அவகாசத்தை 24 வாரமாக நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்படி 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க அனுமதி உண்டு என்றும் ஆனால் கருவின்  குறைபாடுகள் 20 வாரங்களுக்கு பின்பே  தெரிய வரும் என்பதால் கருவை கலைக்க விரும்புவர்கள் நீதிமன்றங்களை நாடுமாறு வற்புறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971ன்படி கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்கள் ஆக உயர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று தொரிவிக்கப்பட்டது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவை கலைக்க குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பிற செய்திகள்

ஜூன் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வருகிற ஜூலை 26 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில் ஜூன் 25 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

13 views

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 65 நாள் பெண் குழந்தை - பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்

பிறந்து 65 நாட்களே ஆன பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

1668 views

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 108 கலசம் அமைத்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடைபெற்றது.

14 views

"ஆய்வு செய்து சலூன் திறக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

18 views

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை கல்லணையில் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் 20 லட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்.

9 views

திமுக சார்பில் நிவாரண உதவிகள் - திமுக எம்பி டி.ஆர்.பாலு வழங்கினார்

முடித்திருத்தும் தொழிலாளிகள் மற்றும் சலவைத் தொழிலாளிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.