சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை
பதிவு : ஏப்ரல் 24, 2019, 06:15 PM
தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸடெர்லைட் ஆலை, மக்கள் போராட்டங்கள்  காரணமாக தொடர்ந்து இயங்க தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஆலையின் 2 ம் கட்ட விரிவாக்கத்துக்கு மத்திய சுற்று சூழல்  அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல்,  தமிழ்நாடு அரசின் சிபகாட் நிறுவனம்  நிலம் வழங்கியதாக குற்றச்சாட்டு  எழுந்தது. இது தொடர்பாக முத்துராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  மத்திய சுற்று சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள் தலைமையிலான  அதிகாரிகள் தூத்துக்குடிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கலியபெருமாள், ஸடெர்லைட் ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்க கட்டுமானப் பணிகள் மற்றும் மின் இணைப்பு வழங்குவதற்காக பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்களை மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அளிக்க  உள்ளதாக கூறினார்.

பிற செய்திகள்

அம்மன் கோயிலில், தீ மிதி திருவிழா கோலாகலம்

சென்னை அருகே அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது.

9 views

குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

5 views

சுற்றுலா பயணிகளைக் கவர வன விலங்குகளின், டிஜிட்டல் புகைப்படம்

ஊட்டியில், வனத்துறை சார்பில், 'சூழல் சுற்றுலா' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5 views

4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.

41 views

கழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

31 views

கோடைகால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு விழா - சிலம்ப ஆட்டத்தில், மாணவர்கள் சாகசம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நிறைவு பெற்ற கோடைகால சிலம்ப பயிற்சி முகாமில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டியது, காண்போரை கவர்ந்தது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.