வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் திடீர் ஆய்வு : மாவட்ட ஆட்சியர் சோதனை - கோவையில் பரபரப்பு
பதிவு : ஏப்ரல் 23, 2019, 05:12 PM
கோவையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்து வாக்கு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 144 கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து 10.3 மணியில் இருந்து, பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று, பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில்  ஆய்வு மேற்கொண்டார்.  அதைதொடர்ந்து தொழில்நுட்ப பிரிவினர் 5 மணி நேர முயற்சிக்கு பிறகு  செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் வேலை செய்ய தொடங்கியுள்ளன. பணி முடியும் வரை  உடனிருந்த மாவட்ட ஆட்சியர், கேமராக்கள் இயங்குவதை உறுதி செய்த பின்னர் புறப்பட்டார். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்கள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

956 views

பிற செய்திகள்

அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.

8 views

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

22 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

17 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

19 views

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.