சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...
பதிவு : ஏப்ரல் 20, 2019, 08:33 PM
ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்ற 5 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வனச்சரகர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது போதமலை மலைக் கிராமம் இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு மேலூர்,  கீழூர்,  கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இந்த  கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சுமார் பதினொரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கரடுமுரடான பாதையில் நடந்து தான் கீழே வரவேண்டிய நிலை உள்ளது.  இந்நிலையில் மலை கிராம இளைஞர்கள், நண்பர்களின் உதவியுடன் Jcp. இயந்திரத்தை வைத்து யாருக்கும் தெரிவிக்காமல் கெடமலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர் காஞ்சனா உத்தரவின் பேரில், வனத்துறையினர் சென்று பார்த்த போது அங்கு  காடுகளில் பாதை அமைத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அண்ணாமலை,  மணிகண்டன்,  தங்கவேல், மனோகரன்,  குப்பன் ஆகிய 5 பேரையும் கைது செய்த வனத்துறை அதிகாரிகள்,  தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து அவர்களை விடுவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

674 views

பிற செய்திகள்

கோதாவரி - காவிரி இணைப்பிற்கு கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வரவேற்பு

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை வரவேற்பதாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

14 views

தோல்வியடைந்த வேட்பாளர் அளித்த பிரியாணி விருந்து

சுமார் 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கி நன்றி தெரிவித்தார்.

138 views

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சிறுவர் ரயிலில் உற்சாக பயணம்

கோடை விடுமுறைக்காக, வைகை அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சிறுவர் ரயிலில், உற்சாக பயணம் மேற்கொண்டனர்.

10 views

"மனோரமா பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்" - இயக்குநர் பாக்யராஜ்

மறைந்த நடிகை மனோரமாவின் 82வது பிறந்த நாள் விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

10 views

குடிநீர் டேங்க் விழுந்து சிறுமி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில் சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கோடை விடுமுறையை கொண்டாட ஆர்வம்

கோடை விடுமுறையை ஒட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.