தமிழகத்தில் பரவலாக மழை...
பதிவு : ஏப்ரல் 20, 2019, 08:24 AM
கொடைக்கானல் பகுதியில் நான்காவது நாளாக இடிமின்னலுடன் கன மழை கொட்டிதீர்த்தது.
கொடைக்கானல் பகுதியில் நான்காவது நாளாக இடிமின்னலுடன் கன மழை கொட்டிதீர்த்தது. மாலை 6 மணிக்கு லேசான சாரல் மழை தொடங்கி பின்னர் பலத்த இடி மின்னலுடன் 3 ம‌ணிநேர‌ம் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் பல்வேறு இடங்களில்மரக்கிளைகள் முறிந்துமின்கம்பங்களில் விழுந்ததால்சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது இதன் காரணமாக பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடுமைமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்துபெய்துவரும் கோடை மழை காரணமாகநகருக்கு குடிநீர் வழங்கும்அணைகளுக்கும், நட்சத்திரஏரிக்கும் பேரிஜம் ஏரிக்கும்தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.க‌ன‌ம‌ழை கார‌ண‌மாக‌ அப்ச‌ர் வேட்ட‌ரி செல்லும் சாலையில் மின்க‌ம்ப‌ம் சாய்ந்த‌தில் 3 ம‌ணிநேர‌த்திற்கும் மேலாக‌ போக்குவ‌ர‌த்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌து.

சேலம் சேலத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாகவே சேலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி பட்டு வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.  பாதுகாப்பு காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையினால் சேலம் மாநகர பகுதிகளில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தாராபுரம்தாராபுரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் மின்கம்பம்,மற்றும் மரங்கள் சாய்ந்தன.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், அங்காங்கே இருந்த மரங்களும் மின்கம்பமும் சாய்ந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது. தாராபுரம் மாரியம்மன் கோவில் கோபுரத்தில் இடி தாக்கி கோபுர சுவர்கள் சேதம்  அடைந்தது.கடும் வெயிலில் பாதிக்கபட்டிருந்த பொதுமக்கள் காற்றுடன் கூடிய மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாணியம்பாடிவேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில மாதங்களாக வாணியம்பாடி சுற்று வட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வாணியம்பாடி நகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

47 views

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

30 views

எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பேர் பலி

கொடைக்கான‌ல் அருகே எரிவாயு சிலிண்ட‌ர் வெடித்த‌தில் ஒரே குடும்ப‌த்தை சேர்ந்த‌ 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

340 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

598 views

பிற செய்திகள்

தங்கத்தை பசையாக்கி உடலில் மறைத்து கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

7 views

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து : தலையில் படுகாயமடைந்த பெண் பலி

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே அரசு பேருந்து போதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார்.

7 views

கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி : பார்வையாளர்களை வசீகரித்த சேவல்கள்

திருச்சியில் பாரம்பரிய சேவலான கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது.

14 views

சேமிப்பு கிடங்கில் தீ விபத்து : தீயை அணைக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடி அருகே சேமிப்பு கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

8 views

விமான டிக்கெட் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி

விருத்தாச்சலத்தில் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தியவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

21 views

"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"

வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.