அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து
பதிவு : ஏப்ரல் 20, 2019, 02:15 AM
வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை
அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் உள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற பிரசாரம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்போவதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளையடித்தது ராகுல் காந்தியின் குடும்பம் தான் என்று குற்றம்சாட்டி உள்ளார்.ஐபிஎல் தலைவராக இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் மோடி, இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

நாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை

நாடு முழுவதும், கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

11 views

"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

பயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

2287 views

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

64 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1119 views

"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

71 views

"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2160 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.