திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டிப் படுகொலை
பதிவு : ஏப்ரல் 19, 2019, 02:03 AM
மதுரையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராசர்புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருசாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான ராஜபாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2010 முதல் இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி நடந்து வரும் மோதலில் இதுவரை 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் குருசாமியின் மருமகன் எம்எஸ் பாண்டியன் ஈடுபட்டிருந்தார். அப்போது  ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பி ஓடியவரை விராமல் துரத்திச் சென்று அருகில் ஒரு வீட்டிற்குள் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது.உயிருக்கு போராடியவரை மீட்டு அருகில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், பட்டப்படகலில் நடந்த படுகொலை சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

433 views

பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

281 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

2425 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

814 views

பிற செய்திகள்

சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

84 views

பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

13 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரைவில் உண்மை தெரிய வரும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தை எழுப்பினார்.

9 views

ஜனநாயக பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவதா? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஜனநாயகம் கொடுத்து இருக்க கூடிய பேச்சுரிமையை அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

15 views

1000 முதல் 1 வரை உள்ள எண்களை தலைகீழாக கூறும் மாணவி - மாணவியின் உலக சாதனை முயற்சிக்கு குவியும் பாராட்டு

ஆயிரம் முதல் 1 வரை உள்ள எண்களை 7 நிமிடத்தில் தலைகீழாக கூறி திருச்சி கல்லூரி மாணவி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

15 views

மருத்துவ படிப்பின் இறுதியில் எக்சிட் தேர்வை ஏற்க முடியாது - சட்டப் பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்

தேசிய மருத்துவ கழக மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.