முதன்முறையாக வாக்களித்த 85 வயது முதியவர்
பதிவு : ஏப்ரல் 19, 2019, 01:58 AM
திருவண்ணாமலை வந்தவாசியில் கன்னியப்பன் என்ற 85 வயது முதியவர் முதன்முறையாக வாக்களித்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
திருவண்ணாமலை மருதநாட்டை சேர்ந்த கன்னியப்பன், விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மகளும் மூன்று பேரன்களும் உள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமும், பல ஆண்டுகளாக வீரம்பாக்கத்தில் ஒருவரிடம் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொத்தடிமைகளாக இருந்த இவர்கள் 2017ஆம் ஆண்டில் மீட்கப்பட்டனர்.இந்த நிலையில்,  வாக்குப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்த இவர்கள் குறித்து தகவல் அறிந்து அம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கன்னியப்பன் வீட்டிற்கு நேரில் சென்று வாக்களிப்பது குறித்து விளக்கியதோடு, இன்று வாக்களிக்கவும் அவரை அழைத்து வந்தார். இதையடுத்து கன்னியப்பனும் அவருடைய குடும்பத்தினர் 7 பேரும் தங்களது கன்னி ஒட்டை பதிவு செய்தனர்.

பிற செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

44 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

6 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

22 views

கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

604 views

"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

8 views

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.