"+2 பொதுத்தேர்வு முடிவு : காலை 9.30 மணிக்கு வெளியாகும்" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : ஏப்ரல் 19, 2019, 01:17 AM
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பதரை மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பதரை மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட இரண்டு நிமிடங்களில், பெற்றோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி கிடைத்துவிடும் என்றும், இணைய தளத்திலும் தேர்வு முடிவு வெளியாகும் என்றும் கூறினார். தேர்வில் வெற்றிபெற்று மேல்படிப்புக்கு செல்ல,  மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறிய செங்கோட்டையன், தோல்வியுறும் மாணவர்கள், ஜூன் மாதத்தில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். புதிய பாடமாற்றத்தை புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.