வெகு விமரிசையாக நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 02:42 PM
விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில், திருநங்கைகளின் புனித தலமாக கருதப்படுது. அங்கு கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தாலி, வளையல், ஆபரண பொருட்களை கொண்டு மணப்பெண்களை போல் அலங்கரித்து கோவிலுக்கு வந்த திருநங்கைகள், அரவான் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 

பின்னர் கோவிலின் முன்பாக பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் திருநங்கைகள் அரவான் சாமியை கணவனாக நினைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனிடையே,  காலை தொடங்கிய சித்திரை தேரோட்டத்தில் பங்கேற்ற  ஆயிரக்கணக்கான மக்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து, தேர் அழிகளம் நோக்கி புறப்பட்ட போது மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறி அழுத திருநங்கைகள் தாலிகளை அறுத்து வளையல்களை உடைத்து தலையில் சூடியிருந்த பூக்களை பிய்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து வெள்ளை ஆடை உடுத்தி, திருநங்கைகள் விதவைக் கோலம் பூண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3447 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4037 views

பிற செய்திகள்

சித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

8 views

சென்னையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து

10 views

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விவகாரம் - வடசென்னை திமுக வேட்பாளர் மகன் கைது

காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் சித்தார்த் கைது செய்யப்பட்டார்

6 views

"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்

ரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.

9 views

9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை - சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல்

சென்னையில் 2018 ம் ஆண்டில் சுமார் 9 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.