அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
பதிவு : ஏப்ரல் 17, 2019, 03:06 AM
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பழைய தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியார் வணிக வளாகத்தில் அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பழைய தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியார் வணிக வளாகத்தில் அ.ம.மு.க . ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இரவில் ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அ.ம.மு.க அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர். அதே வணிக வளாக மாடியில் உள்ள அறையில் சிலர் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் மற்றும் பறக்கும் படையினரை கண்ட அவர்கள் பணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒருசிலரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.கவினர் தடைமீறி கட்டிடத்தின் மேல் பகுதிக்கு நுழைந்தனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக துணை ராணுவ படையினர் வானத்தை நோக்கி 4 முறை சுட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு உருவானது. 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

3 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

42 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

7 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

பொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.