இறுதிக் கட்ட பிரசாரம் நடத்துவதில் அ.தி.மு.க., காங்கிரஸ் இடையே போட்டி : தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுப்பால் பதற்றம்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 02:59 AM
கரூரில் இறுதிக்கட்ட பிரசாரம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடத்த, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்ததால் அந்த பகுதியில் பதற்றம் உருவானது.
கரூரில் இறுதிக்கட்ட பிரசாரம்  பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடத்த, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்ததால் அந்த பகுதியில் பதற்றம் உருவானது. இதனை தணிக்க அங்கு  துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் இறுதிக் கட்ட பிரசாரம் நடத்துவதில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அடுத்த அலுவலருமான அன்பழகன், பிரச்சினைக்குரிய ரவுண்டானா பகுதியில் இரு தரப்பினரும் இறுதிக் கட்ட பிரசாரம் செய்வதற்கு தடை விதித்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப் படைக் காவலர்கள் குவிக்கப்பட்டதா​ல் பரபரப்பு நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டு,  பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்துப் பேருந்துகளும் வெளியேற்றப்பட்டதால் பயணிகள் மிகுந்த தவிப்புக்கு ஆளானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

334 views

பிற செய்திகள்

கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

4 views

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.

6 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

11 views

விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

8 views

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50 views

தூத்துக்குடியின் ஆயத்த ஆடை சாம்ராஜ்யம்... நலிந்துவரும் தொழில் மீட்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரில், பல ஆண்டுகளாக வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துச்செல்லும் அரசியல் கட்சிகள், இந்த முறையாவது அதனை நிறைவேற்றுவார்களா என தொழிலாளர்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.