இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது நாஞ்சில் சம்பத்தை தாக்க முயற்சி : துணை ராணுவம் குவிக்கப்பட்ட நிலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
பதிவு : ஏப்ரல் 17, 2019, 02:45 AM
கரூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.
கரூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் பிற்பகல் 3.30 மணியளவில், வெங்கமேடு பகுதியில் நாஞ்சில் சம்பத், வேட்பாளர் ஜோதிமணியுடன் வேனில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர், தகராறு செய்ததுடன், நாஞ்சில் சம்பத் இருந்த வேனையும் தாக்கினர். இதில் அவர் இருந்த வேனின் கண்ணாடி உடைந்தது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வினர் நாஞ்சில் சம்பத்தையும் தாக்க முயன்ற நிலையில், தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினரை தாக்க தொடங்கியதால் அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. இதில் காவலர் ஒருவரின் மண்டை உடைந்தது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு கலைந்து போகச் செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தம்மை கொல்ல நடத்திய ஒத்திகை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட பிரசாரத்தின் போது நடந்த இச்சம்பவத்தால் கரூரில் பதற்றம் நீடி​த்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

334 views

பிற செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

3 views

ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்

வங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

8 views

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

கோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

8 views

"நேரில் ஆஜராக வேண்டும்" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

6 views

கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

10 views

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.