அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 3.30 லட்சம் பறிமுதல்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 07:09 AM
பதுக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்வதாக புகார்
சேலம் பிள்ளையார் நகரில் அதிமுக பிரமுகர் முத்துசாமி என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.இது குறித்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு 2 தினங்களே உள்ள நிலையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம்  - அமமுகவினர் இருவர் போ​லீசில் ஒப்படைப்பு​தென் சென்னை தொகுதி சைதாப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அமமுக கட்சியை சேர்ந்த இருவரை பிடித்து அதிமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர்.வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்த அதிமுகவினர், இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்நது. இதனையடுத்து அவர்களை குமரன் நகர் காவல்நிலையத்தில் அதிமுகவினர் ஒப்படைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

அரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

119 views

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

90 views

பிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு

பிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு

73 views

பிற செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது

0 views

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

54 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

90 views

பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? : இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் பதிவு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

39 views

பொன்னமராவதி வன்முறை சம்பவ விவகாரம் : வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

714 views

தனியாக நின்ற வேனில் 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே தனியாக நின்றிருந்த வேனில் போலீஸார் சோதனை நடத்தினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.