டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது
பதிவு : ஏப்ரல் 15, 2019, 02:46 PM
திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார்,மணிகண்டன் ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம்  தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார், மணிகண்டன்  ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு  இருவரும் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அப்போது கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டு, கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் கைது செய்து, பட்டா கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் அவர்கள், "டிக்-டாக்" செயலியில் வீடியோ எடுப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோல் நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டிக்- டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

40 views

ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு : மணல் லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் ஆமூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

27 views

பிற செய்திகள்

+2 தேர்ச்சியில் நெல்லை மாவட்டம் முன்னேற்றம் : 2 இடங்கள் முன்னேறி தற்போது 8வது இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டம் இந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

54 views

"நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கலவரத்துக்கு காரணம்" - திருமாவளவன் குற்றச்சாட்டு

அரியலூர் பொன்பரப்பியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக நேற்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

310 views

மஞ்சள் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

47 views

களைகட்டிய மாமல்லபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ச திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

16 views

அருட்கோட்டம் முருகன் கோயில் சித்திரை திருவிழா

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட அருட்கோட்டம் எனப்படும் முருகன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

8 views

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சித்திரை தேரோட்டத் திருவிழா

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.