மகா விஷூ விழா கொண்டாட்டம் - பாரம்பரியம் மாறாமல் உற்சாக வழிபாடு
பதிவு : ஏப்ரல் 15, 2019, 10:33 AM
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் மகா விஷூ சங்கராந்தி விழா பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் தீக்குண்டத்தில் இறங்கியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். முன்னதாக மேளதாளம் முழங்க, பாரம்பரியம் மாறாமல் பெண்கள் குலவையிட்டு  கொடிக்கம்பம் நடப்பட்டது. 

ஆணி படுக்கையில் வலம் வந்த பூசாரி - தீக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
திரிபுரா மாநிலம் பிரதாப்ஹர்க் பகுதியில் நடைபெற்ற கோயில் விழா ஒன்றில் பக்தர் ஒருவர் நீளமான ஆணி படுக்கையில் படுத்து ஊர்வலம் வந்த வினோத நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற அந்த திருவிழாவில் தீக்குழி அமைத்து அதில் இறங்கி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். 

விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜை
மதுரை மாவட்டம் மங்களாம்பட்டி அய்யனார் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது 1008 திருவிளக்குகளை ஏந்தி பெண்கள் 
பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதில் மங்களாம்பட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளாமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆலய தரிசனம் செய்தனர்.

மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு
ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வேப்பிலை அலங்காரத்தில் வீதி உலா வந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. மேள தாளங்கள் முழங்க தீச்சட்டி ஏந்தியும் கிடா வெட்டி அன்னதானம் வழங்கியும் பக்தர்கள் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4834 views

பிற செய்திகள்

85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9 views

மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர்

14 views

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

35 views

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

25 views

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

222 views

அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.