ஜே.கே. ரித்தீஷின் உடல் இன்று மாலை அடக்கம் - அரசியல் தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:45 PM
மாரடைப்பால் காலமான நடிகர் ஜே.கே. ரித்தீஷின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் முன்னாள் ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் நேற்று காலமானார். 46 வயதான ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அமைச்சர் மணிகண்டன், நடிகர்கள் ராதாரவி, மனோபாலா, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர், ரித்திஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதைத்தொடர்ந்து, ஜே.கே. ரித்தீஷின் உடல் இன்று  மாலை நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.