நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உயிரிழந்தார் - பிரசாரம் செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
பதிவு : ஏப்ரல் 13, 2019, 07:44 PM
நடிகர் ஜே.கே. ரித்தீஷ் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்
1973ல் ஜே.கே.ரித்தீஷ் இலங்கையின் கண்டியில் பிறந்தவர்.விவசாய பின்னணியை சேர்ந்த குடும்பம் இவர்களுடையது.அதன்பிறகு சில ஆண்டுகளில் இவர்களின் குடும்பம் ராமநாதபுரத்திற்கு குடிபெயர்ந்தது.சினிமாவின் மீதான ஆர்வம் கொண்ட ரித்தீஷ் நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் கானல் நீர் என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் வெளியாவதற்கு ஏற்ற வகையில் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார் ரித்தீஷ்.ஆனால் இந்த படம் வெற்றியடையவில்லை.இதனைத் தொடர்ந்து வெளியான நாயகன் என்ற படத்தின் மூலம் தான் பேசப்பட்டார் ரித்தீஷ்.அதன்பிறகு பெண் சிங்கம் படத்திலும் நடித்தார்.இதற்கிடையில் திமுகவின் மீதான விருப்பம் காரணமாக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் ரித்தீஷ்.2009ல் நடத்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நின்ற அவர், பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.எம்.பி.யாக இருந்தபோது தன்  தொகுதிக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக விளங்கினார் ரித்தீஷ். இதுமட்டுமின்றி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றிலும் முனைப்போடு செயல்பட்டவர்.2014ல் திமுகவில் இருந்து விலகிய ரித்தீஷ் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்கேஜி படத்தில் ராமராஜ பாண்டியன் என்ற அரசியல்வாதியாக நடித்திருந்தார் ரித்தீஷ்.ராமநாதபுரத்தில் வசித்து வந்த ரித்தீஷ்,பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டு இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தான் அவர் உயிரிழந்தது உறுதியானது. 
சினிமாத்துறையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிறந்தவர் என்ற பெயர்  ரித்தீஷ்க்கு இருந்தது.இந்த நிலையில் தான் இன்று அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

121 views

பிற செய்திகள்

+2 தேர்ச்சியில் நெல்லை மாவட்டம் முன்னேற்றம் : 2 இடங்கள் முன்னேறி தற்போது 8வது இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டம் இந்தாண்டு 2 இடங்கள் முன்னேறி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

12 views

"நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கலவரத்துக்கு காரணம்" - திருமாவளவன் குற்றச்சாட்டு

அரியலூர் பொன்பரப்பியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக நேற்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

95 views

மஞ்சள் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

22 views

களைகட்டிய மாமல்லபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ச திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

12 views

அருட்கோட்டம் முருகன் கோயில் சித்திரை திருவிழா

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட அருட்கோட்டம் எனப்படும் முருகன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

8 views

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சித்திரை தேரோட்டத் திருவிழா

நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.