"கறுப்பு பண விவகாரம்..2019க்கு பிறகு தகவல்..." - பிரதமர் மோடி
பதிவு : ஏப்ரல் 13, 2019, 02:43 PM
மாற்றம் : ஏப்ரல் 13, 2019, 03:23 PM
கறுப்பு பணம் மீட்புக்கு சுவிஸ் வங்கி மற்றும் உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கறுப்பு பண மீட்பு குறித்து பாஜகவின் முழக்கம், நாட்டு மக்களின் வங்கி கணக்கில் தலா 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்ற மோடியின் வாக்குறுதி குறித்து  எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில், அது வெற்றி பெறாததற்கு யார் காரணம் என்று கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, கறுப்பு பணம் மீட்புக்கு சுவிஸ் வங்கி மற்றும் உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள், அதில்,  செலுத்தும் தொகை குறித்து 2019-க்கு பிறகு கிடைத்து விடும் என்றார். கடந்த முறை, ஆட்சியமைத்த உடன் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நடவடிக்கைகளை துவக்கியதாக கூறிய அவர், உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டும் காங்கிரஸ் ஆட்சியில் குழு அமைக்கவில்லை என்றார். பின்லேடனை அமெரிக்கா சுட்டு எடுத்துவந்தது போல், புல்வாமா தாக்குதல் பதிலடி விவகாரத்தில், பாகிஸ்தான் மீதான தாக்குதலில், அந்நாட்டில் தீவிரவாதிகள் மீது இந்தியாவால் குறிவைக்க முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நடவடிக்கை எடுக்க யோசனை இது என்று தெரிவித்தார். மத்திய அரசு திட்டங்களால் தமிழ் நாட்டினர் எத்தகைய அளவு பயனடைந்துள்ளனர் என்பது குறித்து தந்திக் குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு வரவேற்பளித்த மக்கள்,  இழப்பீடு கிடைக்க ஒரு வருடம் தாமதம் ஏற்படுவதாக கூறுவது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், காப்பீடு வழங்குவதில், கால தாமதம் ஏற்பட்டது உண்மை தான் என்ற பிரதமர் மோடி, அதற்கான காரணம் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதாக கூறினார். தாமதம் ஏற்படும் தொகைக்கு, அபராதம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரம் கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கியுள்ளதாக கூறினார். வளர்ச்சி எங்கு உள்ளதோ, அங்கு நன்மையும் நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  ஜி.எஸ்.டி வரி அமலாக்கப்பட்ட பிறகு, வரிச்சுமை அதிகரித்திருப்பதாகவும், விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, அதில் உண்மை இல்லை என்றார்.  ஜி.எஸ்.டி வரிக்கு முன்பு சோதனை சாவடிகளில் தலா 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, செலவானது என்றார். தற்போது அவை நீக்கப்பட்டதும், அந்த தொகை நாட்டு மக்களின் நன்மைக்காக செலவிடப்படுவதாக கூறினார். ஜி.எஸ்.டி. வரியால், வியாபாரிகள், நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாகவும், சாமான்ய மக்களுக்கு இதனால் பலன் இல்லை என்றும் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, உணவகம் உள்ளிட்ட இடங்களில் 33 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. வரி, 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சாமான்ய மக்கள் பயனடையும் விவரங்களை தருவதாகவும் கூறினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்டி வரி அமலாக்கத்தால், தொழில்கள் முடக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, கடந்த 1992 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும், நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்த போது நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாக குறிப்பிட்டார். பாஜக ஆட்சியில், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் நாடுகளில், இந்திய முதலிடத்தில் உள்ளது என்ற அவர், சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தும், பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1135 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4517 views

பிற செய்திகள்

மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

திருப்பதி : செம்மரம் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 views

திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு

திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

290 views

"புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

13 views

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் மேடை சரிந்து விபத்து

ஆந்திர மாநிலம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

16 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் - முத்துக்கவச அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.