தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல்?
பதிவு : ஏப்ரல் 13, 2019, 06:28 AM
வருமான வரித்துறை - பறக்கும் படையினர் இணைந்து சோதனை
கோவை தனியார் புகைப்பட நிறுவனத்தில் வருமான வரித் துறையினரின் அதிரடி சோதனை  மேற்கொண்டனர்.  கோவை - திருச்சி சாலையில் சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட  தனியார் புகைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  அங்கு முறைகேடான பணம் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து வருமான வரி துறையினருடன்  இணைந்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் கடையின் உரிமையாளர், பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரிடமும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தையும் சமர்ப்பித்ததாகவும், அதனை ஆய்வு செய்தவர்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறி சென்று விட்டதாகவும் புகைப்பட நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

நிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்

கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.

11 views

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

76 views

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - சிறுமியின் தாய், கணவர் மீது வழக்கு பதிவு

கோவை பேரூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தாய், கடந்த பிப்ரவரி மாதம் 23 வயதான இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

8 views

ஜல்லிக்கட்டு காளையின் நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

13 views

அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு - ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

15 views

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மனு - தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணை

தணிக்காசலம் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.