காபி கோப்பை, பென் டிரைவில் கட்சி சின்னங்கள்...
பதிவு : ஏப்ரல் 13, 2019, 05:21 AM
தேர்தல் பிரசாரங்களில் கொடிகள், சின்னங்கள், பேனர்கள், விளம்பரங்களைத் தாண்டி கட்சிகள் தங்கள் அடையாளத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்க்கின்றன, எந்த வடிவங்களில் சேர்க்கின்றன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.
விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது தேர்தல் திருவிழா. பிரசாரங்களில் மும்முரம் காட்டி வருகின்றன கட்சிகள். இதற்கு பின்னால் கொடிகள், தோரணங்கள், தொப்பிகள் என பெரிய அளவிலான வர்த்தகம் நடந்து வருகிறது. முன்பெல்லாம்,  சின்னங்களை மக்களிடம் கொண்டு செல்ல சுவரெழுத்து, போஸ்டர், கொடிகள், பேட்ஜ்கள் மட்டும்தான் பிரதானமாக இருந்தன. அதற்கு பின்னர் தொப்பி,  டி சார்ட், சாவிக் கொத்து, கார், பைக் ஸ்டிக்கர்கள் போன்றவை மூலமாக கொண்டு வரப்பட்டன. ஆனால் அவை எல்லாம் பழைய முயற்சிகள் என்று சொல்வதற்கு ஏற்ப, தற்போது காபி கோப்பை , பென் டிரைவ்,  பவர் பேங்க், கை பாண்டுகள் போன்ற  ஹை டெக் உபகரணங்கள் மூலமும் சின்னங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. புடவைகள், ஜாக்கெட்டுகளிலும் தலைவர்களில் படங்கள் இடம்பெற்றுவிட்டன. மோடி, பிரியங்கா , இந்திரா காந்தி போன்ற தலைவர்களின் புகைப்படங்கள், கட்சி சின்னங்கள் அச்சிடப்பட்ட புடவைகள் தேர்தல் நேரத்தில் அதிகமாக விற்பனை ஆகின்றன.

பாஜக , காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. திமுக அதிமுகவும் அதிக அளவில் கொள்முதல் செய்யும் வரிசையில் இருக்கின்றன. நமோ செயலி மூலமும் பிஜேபி விற்பனை செய்து வருகிறது. தேர்தல் கால பிரசாரத்துக்கு ஏற்ப  செளகிதார் என்று அச்சிடப்பட்ட பனியன்களும், தொப்பிகளும் விற்பனைக்கு வந்துள்ளன.  பரிசுப்பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்ட அன்று மதியமே பரிசுப் பெட்டி மாடல்கள் தமிழக வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களில், கட்சிகளின் சின்னம் கொண்ட  கார், பைக் ஸ்டிக்கர்கள், வாட்டர் பாட்டில், டி சார்ட், தொப்பி ஆகியவற்றுக்கு அதிக தேவைகள் உள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். 

இந்த பொருட்கள் அனைத்தும், கட்சி அலுவலகங்களைத் தாண்டி, வெளிச் சந்தைகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்போது, அமேசான், பிளிப்கார்ட் என ஆன்லைன் சந்தைகளிலும் வாங்கலாம் என்கிற அளவுக்கு சந்தை விரிவடைந்துள்ளது. கட்சிகளின் ஆர்டர்களுக்கு ஏற்பவும்,  விற்பனை எதிர்பார்ப்பு காரணமாகவும் இவை தயாராகின்றன. கட்சி அனுதாபிகளுக்கு இவை உணர்வு சார்ந்த விஷயம். வர்த்தகர்களுக்கு  தீபாவளி, பொங்கல் பண்டிகை காலம்போல  இதுவும் ஒரு சீசன் காலம்.

தொடர்புடைய செய்திகள்

வட கிழக்கு மாநிலங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்படும் - பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி

வேலையில்லா திண்டாட்டம், பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ் சாட்டியுள்ளார்.

25 views

எதிர்கட்சிகள் மாநாடு மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - திருமாவளவன்

தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

51 views

"அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" - தம்பிதுரை

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

55 views

பிற செய்திகள்

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

29 views

ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

152 views

அறந்தாங்கியில் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப் பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆகாயமாரிய அம்மன் கோவிலில் சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

27 views

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

20 views

நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

55 views

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

297 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.