தமிழர் மனங்களை பாஜகவினரால் வெல்ல முடியவில்லை - ராகுல்காந்தி
பதிவு : ஏப்ரல் 13, 2019, 05:14 AM
நாக்பூரில் இருந்து தமிழர்களை ஆள, பாஜக நினைப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவர்களுக்கு தமிழர்களின் மனம் தெரியவில்லை என்றார்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டம், தேனியில் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ப. சிதம்பரம், முகுல் வாஸ்னிக், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாதவர்கள், பாஜகவினர் என்றார். தமிழர்களின் முற்போக்கு சிந்தனையை அறியாத ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர், தமிழர்களின், கலாசாரம், பண்பாடு, மொழி குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள் என்றார். நீட் தேர்வை திணிக்க மாட்டோம் என்ற ராகுல்காந்தி, தங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம் சமூக நீதி, நியாயம் மட்டுமே என்றார். தமிழர்களின் மனமும், எண்ணமும் பாஜகவினருக்கு தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

35 views

தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.

119 views

பிற செய்திகள்

அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

57 views

கல்வி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு எதிரொலி : நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு

தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்து வரும் நிலையில்,கமல் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

255 views

"சென்னையில் ஓரிரு வாரத்தில் மின்சார பேருந்து இயக்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

சென்னையில் மின்சார பேருந்துகள் ஓரிரு வாரத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

54 views

செந்தில் பாலாஜி கருணாநிதியை விமர்சித்து பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய அமைச்சர் : தி.மு.க, அ.தி.மு.க.வினர் கடும் அமளி

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

196 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

32 views

கச்சேரியை ரசித்த கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள்

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.