இளைஞரை நம்பி சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மீட்பு
பதிவு : ஏப்ரல் 13, 2019, 04:18 AM
பணக்காரவீட்டு பையன் போல நாடகமாடிய இளைஞரை நம்பி, கேரளாவிற்கு சென்ற பள்ளி மாணவி, பல நாட்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு என்ற பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் தேதி தேர்வு எழுத சென்ற மாணவி, வீடு திரும்பாத நிலையில், அச்சமடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில், மாணவி பக்கத்து ஊரான கட்டாத்துறையை சேர்ந்த ஜோஸ்பிளின் ராஜகுமாருடன் பழகி வந்த‌து தெரியவந்துள்ளது. அவரது செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போலீசார், அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோனி பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். கேரளா விரைந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்து, ராஜகுமாரை கைது செய்து, சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது, தினம்தோறும், புது புது உடைகள், வித விதமான இருசக்கரவாகனத்தில் வந்த‌தால், பணக்கார வீட்டு இளைஞன் என்று நம்பி, அவரை காதலித்த‌தாக கூறியுள்ளார். இதையடுத்து, தேர்வு எழுதிய கையோடு மாணவியை  கேரளா அழைத்து சென்ற ராஜகுமார் திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். ராஜகுமாரின் நிஜமுகம் தெரிய வரவே, அங்கிருந்து மாணவி தப்பி செல்ல முயன்ற நிலையில், ராஜகுமார், மாணவியை அடைத்துவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர்,  பள்ளி மாணவிகள், எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுகொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

521 views

ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

171 views

அமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...

நீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.

968 views

"மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை" - ராஜாசெந்தூர்பாண்டியன்

ஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

142 views

பிற செய்திகள்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

4 views

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

51 views

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் 22வது கோடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

16 views

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

9 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.