வட்டித்தொகை கொடுக்காததால் கார் பறிமுதல் : செல்போன் டவர் மீது ஏறி நின்று வியாபாரி போராட்டம்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 07:43 PM
கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்தை சேர்ந்த வியாபாரி முத்துப்பாண்டி, அதே ஊரை சேர்ந்த சுடலை என்பவரிடம் தனது காரின் பதிவு சான்றிதழை கொடுத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளத்தை சேர்ந்த வியாபாரி முத்துப்பாண்டி, அதே ஊரை சேர்ந்த சுடலை என்பவரிடம் தனது காரின் பதிவு சான்றிதழை கொடுத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வட்டி பணம் கட்டாததால் முத்துப்பாண்டி வைத்திருந்த காரை, குண்டர்களை கொண்டு சுடலை பறிமுதல் செய்துள்ளார். இதனையடுத்து தனது காரை எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முத்துப்பாண்டி அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து முத்துப்பாண்டி தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

262 views

பிற செய்திகள்

மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு : ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை அழகர் கோவில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

27 views

ஒரே நாளில் 8 செ.மீ. மழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

123 views

அறந்தாங்கியில் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப் பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆகாயமாரிய அம்மன் கோவிலில் சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

26 views

காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.

20 views

நாக்பூரில் வேலை பார்த்த தமிழக ரிக்சா ஓட்டுநர் மரணம்

நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரிக்சா ஓட்டுநர் மத்திய பிரதேச மாநிலம் நாக்பூரில் ரிக்சா ஓட்டி வந்துள்ளார்.

54 views

அனுமதித்த அளவை மீறி கட்டப்படும் பள்ளிவாசல் : பகுதி மக்கள் எதிர்ப்பு - பணிகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மணலிக்கரையில் ஆர்.சி தெருவில், அரசு அனுமதி அளித்த அளவை விட பெரிதாக பள்ளி வாசல் கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

279 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.