தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 05:51 PM
திருவள்ளூர் மாவட்டம் பி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
திருவள்ளூர் மாவட்டம்  பி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் குடும்பத்தினருடன் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் அவரது மனைவி கோவிந்தம்மாளின் கழுத்தில் இருந்த தாலியை கட்டரில் அறுத்துள்ளனர். இதை சுதாரித்து கொண்ட கோவிந்தம்மாள் தாலியை இறுக பிடித்துள்ளார். இருப்பினும் மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1246 views

பிற செய்திகள்

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

10 views

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

7 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

70 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

8 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.