தேர்தல் பிரசாரத்தில் திமுக - அமமுக கூட்டணி கட்சி மோதல்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 02:45 AM
மத்திய சென்னை தொகுதியில் திமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அமைந்தகரை  பகுதியில், அமமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் தெகலான் பாகவிக்கு தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது, அதே பகுதியில் திமுக நிர்வாகிகளும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, திமுகவைச் சேர்ந்த சுமார் 10 பேர், எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, திமுக நிர்வாகி மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் புகார் அளித்ததால் நேற்று இரவு 11 மணி அளவில் திமுகவினர் திரண்டனர்.இதுபோல, அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரும் காவல் நிலையத்தில் குவிந்ததோடு, வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலதாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டினர். இதனால், நள்ளிரவு வரை பரபரப்பு நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

6 views

மதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​

5 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..!

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

58 views

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

8 views

தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.

5 views

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.