வருமான வரி சோதனை தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 08:29 AM
வேலூர் வருமான வரி சோதனை தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய ஆவணங்கள் இல்லாததால் 124 கோடியே 63 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்றும், நேற்று மட்டும் இரண்டு கோடியே 33 லட்சம்  பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோன்று 283 கோடி ரூபாய் மதிப்பிலான 989.6 கிலோ தங்கம் மற்றும் 492.3 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலை கண்காணிக்க ஏழாயிரத்து 280 நுண்பார்வையாளர்கள்  நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான நாட்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத் தேர்தல்  நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தொடரும் என்றும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

534 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4043 views

பிற செய்திகள்

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

9 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

11 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

19 views

கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.