"50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் எதையும் செய்யவில்லை" - பிரசாரத்தின் போது கமல்ஹாசன் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 11, 2019, 07:44 AM
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அருளை ஆதரித்து கமல்ஹாசன் திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி  வேட்பாளர் அருளை ஆதரித்து கமல்ஹாசன் திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மக்கள் நீதி மய்யம் கட்சியை பார்த்து மற்ற கட்சிகள் பயந்து போய் உள்ளதாக குறிப்பிட்ட கமல்ஹாசன், தமிழகத்தின் நலனுக்கு குரல் தருபவர்களை மக்கள்  ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். 

மாற்றம் கொண்டு வர மக்களால் மட்டுமே முடியும் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உறுதி

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும்  ஷாஜி, விழுப்புரம் தொகுதி வேட்பாளர் அன்பில் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் கணேஷ் ஆகியோரை ஆதரித்து செஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமலஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  நீலகிரி அருகே  மலைவாழ் மக்கள் டார்ச் லைட் பயன்படுத்தக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மக்கள் நினைத்தால், இந்த தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4097 views

பிற செய்திகள்

குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

மதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

கோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

கரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

16 views

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

18 views

ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்

வங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

71 views

7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

கோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

19 views

"நேரில் ஆஜராக வேண்டும்" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.