காங்கிரசில் இருந்து அல்பேஷ் தாக்கூர் ராஜினாமா
பதிவு : ஏப்ரல் 11, 2019, 01:29 AM
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அல்பேஷ் தாக்கூர், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவரால், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 43 தொகுதிகளில் வெற்றி கிடைத்ததாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என அதிருப்தியடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அல்பேஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார். தனது சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் தவறியதால், தாக்கூர் சேனா அமைப்பின் உத்தரவை ஏற்று, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.பா.ஜ.க.வில் இணையப் போவதில்லை எனவும் அல்பேஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அல்பேஷ் தாக்கூரின் முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பலத்த காயம்

கேரளாவில் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

1181 views

அ.தி.மு.க கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு தோல்வி பயம் - அன்புமணி

"திட்டங்களை பற்றி பேசாமல் திட்டி பேசி வருகிறார் ஸ்டாலின்" - அன்புமணி ராமதாஸ்

56 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

336 views

பிற செய்திகள்

பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

49 views

காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

29 views

பிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்

பிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

112 views

ஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

241 views

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

28 views

ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை

புதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.