பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி ரகசிய அறிக்கை தாக்கல்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 12:54 AM
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க கோரிய வழக்கு, ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது சகோத‌ர‌ர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு கடந்த மாதம்13 ஆம் தேதி சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த‌து. இந்நிலையில், சிபிஐ நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என கோரி, வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில்ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த‌து.அப்போது இதுவரை வழக்கினை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி போலீசார், ரகசிய அறிக்கை ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்த‌தால்,அந்த அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் புதிய அரசாணை இதுவரை கிடைக்காத‌தால், சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கண்காணிப்பது தொடர்பாக தன்னால் பதில் அளிக்க முடியாது என்றார்.இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

4 சக்கரங்களுடன் இயக்கப்பட்ட அரசு பேருந்து

பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தில் ஆறு சக்கரங்களுக்கு பதிலாக நான்கு சக்கரங்கள் மட்டும் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

459 views

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து

கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

2600 views

பிற செய்திகள்

இளைஞர் வெட்டி கொலை - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராணுவ வீரர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

52 views

அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாள் : அர்ச்சகர்கள் திடீர் புறக்கணிப்பு - பரபரப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 17வது நாளான இன்று, அர்ச்சகர்கள் திடீரென புறக்கணிப்பு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

10 views

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

18 views

திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் தாமதம் : செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியல்

செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

26 views

மண் சரிவு - புதைந்த 3 தொழிலாளர்கள்...

நீலாங்கரை அருகே கழிவு நீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

19 views

வேலூர் : கள்ள சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பூதமலையில் கள்ளச் சாராயம் காய்ச்ச மர்ம நபர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களை பொது மக்கள் அழித்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.