விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு...
பதிவு : ஏப்ரல் 10, 2019, 04:46 PM
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காவல்துறையினர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
திருச்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவை தேர்தல் அலுவலர் சிவராசு நேரில் பார்வையிட்டார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள கலையரங்கத்தில்  இந்த வாக்குப்பதிவு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 1720 மாநகர காவலர்கள் இன்றும், மாவட்ட ஊரக பகுதியில் தேர்தல் பணிபுரியும்1038 காவல்துறை அலுவலர்கள் நாளையும் என 2 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்கின்றனர். 

கோவை தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தபால் வாக்குப்பதிவு...கோவை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுகள் கடந்த ஞாயிற்று கிழமை பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவை மாநகர காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு, கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் சுமார் ஆயிரத்து இருநூறு காவலர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 9 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவுராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. பரமக்குடி  தொகுதிக்கு உட்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சுமார் 299 பேர் வாக்களித்தனர். தேர்தல் அலுவலர் ராமன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  

பிற செய்திகள்

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

2 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

9 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.