மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை - ஒருவர் கைது
பதிவு : ஏப்ரல் 10, 2019, 04:17 PM
சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருந்தாளுநர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்த  தமிழ்ச்செல்வன் தான் கொல்லப்பட்டவர் ஆவார். இன்று காலை அவரை பார்க்க வந்த அருண்குமார் என்ற இளைஞர், தனது தாயுடன் பழகக் கூடாது என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இருவரிடையே நடந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருந்தாளுரை ஓட ஓட விரட்டி குத்திக் கொன்றார். தப்ப முயன்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் ஒரு அறையில் அடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அருண்குமாரை கைது செய்து அழைத்து சென்றனர். மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த அரசு மருத்துவமனையில், ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. 

பிற செய்திகள்

நிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்

கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.

23 views

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

86 views

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் - சிறுமியின் தாய், கணவர் மீது வழக்கு பதிவு

கோவை பேரூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தாய், கடந்த பிப்ரவரி மாதம் 23 வயதான இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

9 views

ஜல்லிக்கட்டு காளையின் நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

13 views

அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு - ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

16 views

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மனு - தணிகாச்சலம் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணை

தணிக்காசலம் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.