சின்ன வெங்காயம், பச்சமிளகாய் காம்போவில் பழைய சோறு...
பதிவு : ஏப்ரல் 10, 2019, 03:35 PM
மதுரை மாட்டுத் தாவணியில் ஜல்லிக்கட்டு காளையும், கட்டுடலுமாக நிற்கும் வீரன் என வரவேற்பு காட்டும் ஒரு கடையில் அற்புதமான பாரம்பரிய உணவை மீட்டுத் தந்துள்ளனர்.
நாவில், எச்சில் ஊறும் உணவுகள் எத்தனை நம்மை வசீகரித்தாலும், அவை உடலுக்கு வலு சேர்க்குமா? என்பது கேள்வி குறி. கம்பீர உடலுக்கு வலு சேர்த்த பாரம்பரிய உணவு மீண்டும் நம்மை அழைக்கிறது, வாருங்கள் பார்ப்போம். வீட்டுக்குள் முடங்கி, சிலந்தி வலையில் சிக்கி தவிப்போரை, குறிவைத்து ஆன்லைன் உணவகங்கள் கடை விரித்துள்ளன. அங்கு, கிடைக்காதவை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற உணவுகள். சுட்டெரிக்கும் வெயிலில், உடலை வியர்வை நனைக்க, சோர்ந்து போகும் நேரத்தில், நொடியில் சக்தியை மீட்டுத் தந்தது பழைய சோறு கஞ்சி.  

மதுரை மாட்டுத் தாவணியில் ஜல்லிக்கட்டு காளையும், கட்டுடலுமாக நிற்கும் வீரன் என வரவேற்பு காட்டும் ஒரு கடையில், அற்புதமான பாரம்பரிய உணவை மீட்டுத் தந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வந்து அமர, அவர்கள் முன், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வத்தல் இவைகளோடு, மண் பாண்டத்தில் வருகிறது அற்புதமான பழைய சோறு. உண்மையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு சாப்பிட்டதாக கூறும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி புதியது. கார்போஹைட்ரேட் உள்பட  சக்திகளை உடலில் சேர்க்கும் இந்த பழைய சோறு, அந்தப் பகுதியில் பிரபலமாகி வருகிறது. வெயிலுக்கு இதம் சேர்ப்பது மட்டுமல்ல, உடலை குளிர்வித்து நலம் சேர்ப்பதாகவும் கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.    

பொருளாதார தேவையின் அவசியம், நம்மை வேகமாக தள்ளும் வாழ்க்கை. இந்த ஓட்டத்தின் பாதையில் உணவை மறந்து விடுகிறோம். அதில், ஆரோக்கியமான உணவை தேட நேரமில்லை என்பதும், மாற்றுக் கருத்தில்லாத உண்மை. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அவசர உணவுகளைவிட, ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்கும் இந்த பழைய சோற்றின் மகத்துவம் என்றும் மாறாதவை. அம்மாவின் கை ருசி, மண் மனம் மாறாதவை என எப்படி பார்த்தாலும் பழைய சோற்றுக்குத்தான் முதலிடம். சின்ன வெங்காயம், பச்சமிளகாய் காம்போவில், பழைய சோற்றை ருசிக்காதது, இந்த பிறப்பில், அமிழ்தத்தை வேண்டாம் என்று சொல்வதற்கு சமம். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5554 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4554 views

பிற செய்திகள்

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

5 views

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி

புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.

5 views

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு முத்திரைகளை பயன்படுத்தி ரூ. 5 கோடி மோசடி : மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு கிராமமக்கள் புகார்

காங்கேயத்தில் மர்ம கும்பல் ஒன்று கிராம‌ப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நூதன முறையில் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த‌து தெரியவந்துள்ளது.

4 views

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

7 views

100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.